I am an online tutor. I tutor Maths and English.My classes will be interactive and interesting. My skype id : selviraveendran Whatsapp number: 9442624629 mail id : onlinetutorselviraveendran@gmail.com My educational blog is http://onlineteaching-selviraviwebscom.blogspot.in I share useful information in Tamil in this blog.
Thursday, March 30, 2017
Friday, March 24, 2017
கழுத்தில் சுருக்கம் உங்கள சுமாரா காண்பிக்குதா?
கழுத்தில் சுருக்கம் உங்கள சுமாரா
காண்பிக்குதா?
கழுத்தில் சுருக்கம் ஏற்படுவதற்கான
காரணங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
சூரிய புறஊதாக்கதிர்களின் அதிகப்படியான
தாக்கம், ஒழுங்கற்ற தூங்கும் முறை, புகைப்பிடித்தல் மற்றும் உடலில் சமநிலையற்ற ஹார்மோன்கள்.
இவைகள் தான் கழுத்தில் சுருக்கம் ஏற்பட முக்கியக் காரணம். கழுத்து சுருக்கத்தை போக்க
சில பயனுள்ள ஈஸியான வீட்டு வைத்திய முறைகளை இப்போது பார்க்கலாம் வாங்க...
வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்
அதிக அளவில் இருப்பதால் இது கழுத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும். ஒரு வாழைப்பழத்தை
எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிது தேனை கலந்து, அந்தக் கலவையை கழுத்தில்
தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின் அந்தக் கலவையைக் கழுத்தில் ஒரு மாஸ்க் போல போட்டு
10 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரினால் கழுத்தை கழுவி விட வேண்டும்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்
அதிகமாக இருக்கின்றது. இது நமது உடலில் வயதாவதினால் ஏற்படும் சுருக்கங்களை வராமல் தடுக்கும்.
சில துளிகள் பாதாம் எண்ணெயை மிதமாக சூடேற்றி கழுத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
அதுவும் மசாஜ் செய்யும் போது மேல் நோக்கி செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு 2 அல்லது
3 முறை இதை செய்தால் சுலபமாக கழுத்து சுருக்கத்தைப் போக்கிவிடலாம்.
பப்பாளி பழம் பப்பாளியிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. பப்பாளிப் பழத்
துண்டுகள் சிலவற்றை எடுத்து மசித்துக்கொள்ள வேண்டும். அதில் தேன் மற்றும் எலுமிச்சைச்
சாறு சிறிது சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கலக்கிய அந்த கலவையை கழுத்தில் தடவ வேண்டும்.
சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும். ஒரு நாளைக்கு இதனை 2 அல்லது 3 முறை செய்யலாம்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் மாலிக் ஆசிட்
உள்ளது. இது கழுத்து சுருக்கத்தை போக்கி இளமை தோற்றத்தைக் கொடுக்கும். கற்றழை ஜெல்லை
எடுத்து கழுத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். மேலும் சருமத்தை வெண்மையாக்க அதில் சிறிது
எலுமிச்சைச் சாற்றை கலந்த தடவ வேண்டும். மற்றொரு முறை, கற்றாழை ஜெல்லுடன் வைட்டமின்
ஈ எண்ணெயை சேர்த்து கலந்தும் மசாஜ் செய்யலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரினால்
கழுவிடலாம்.
இஞ்சி
கழுத்து சுருக்கத்தைப் போக்க இஞ்சி ஒரு சிறந்த மருந்தாகும்.
இஞ்சியை துருவி அதனை அரைத்து சாறு
எடுத்து அதில் சற்று தேனை ஊற்றி கலந்து கழுத்தில் தடவ வேண்டும். இது செய்வதனால் கழுத்து
சுருக்கம் நீங்கி, இளமைப் பொழிவு வந்துவிடும்.
கேரட்
கழுத்து சுருக்கத்தை தடுக்கும் கொலாஜனை கேரட் அதிக
அளவில் உற்பத்தி செய்கிறது. கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து நன்றாக மசித்துக்
கொள்ள வேண்டும். அதில் 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து
நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த
நீரில் கழுவிடலாம்.
எலுமிச்சைச் சாறு
எலுமிச்சைச் சாற்றில் சிட்ரிக்
அமிலம் உள்ளது. இது இறந்த சரும செல்களை அழித்து வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.
2 முதல் 3 டீஸ்பூன் எலுமிச்சைச்சாற்றை கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த
நீரினால் கழுவிட வேண்டும்.
அன்னாச்சிப் பழ ஜூஸ்
அன்னாச்சிப் பழத்தில் என்சைம்கள்
இருக்கின்றது. இது சருமத்தை பொழிவாக்கி, இறந்த சரும செல்களை எளிமையாக அழித்துவிடுகிறது.
சிறிது அன்னாச்சிப் பழ ஜூஸ் எடுத்து கழுத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர்
குளிர்ந்த நீரினால் கழுவிலாம். இல்லையென்றால், சிறிது அன்னாச்சிப் பழத்தை எடுத்து கழுத்தில்
தடவினாலும் அதுவும் சுருக்கத்தைப் போக்கும்.
Saturday, March 11, 2017
Subscribe to:
Posts (Atom)
-
I Naan He Avan She Aval You Nee It Athu A Oru Come Vaa Came / Vanthuttan(male)/vanthutta(female)...