Friday, December 9, 2016

CHAKKRAS


USEFUL TIPS


கண்டங்களின் பெயர் மற்றும் பின்னணி


கண்டங்களின் பெயர் பின்னணி வரலாறு மற்றும் அர்த்தங்கள் பற்றி தெரியுமா?
கற்றது கையளவு, கல்லாதது கடலளவு என்பார்கள். ஆம், இது உண்மை தான். உலகையே அறிந்தாலும், அது மாபெரும் பிரபஞ்சத்தில் ஒரு சிறு புள்ளி தான் என்பதை நாம் மறுக்க முடியாது. கடல்களை எல்லையாக கொண்டிருக்கும் கண்டங்களுக்கு எப்படி பெயர் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?
எதற்காக, எதை வைத்து நாம் ஆப்ரிக்கா, ஆசியா, அண்டார்டிகா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என இந்த கண்டங்களை அழைக்கிறோம் என் என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?

ஆப்ரிக்கா!
ஆரம்பத்தில் "ஆப்ரி" எனும் பழங்குடி மக்கள் வாழ்ந்த இடம். பிறகு ஆப்பி இனத்தவர் வாழ்ந்த இடம் என்ற அர்த்தத்தில் ஆப்ரிக்கா என்ற பெயர் பெற்றது இந்த கண்டம்.

அண்டார்டிகா!
அண்டார்டிகா கிரேக்க சொல். அண்டார்டிகா! என்பதற்கு வடக்கு திசைக்கு எதிரானது என்ற பொருளாகும். புவியின் தெற்கு பகுதி நுனியில் தான் அண்டார்டிகா அமைந்திள்ளது. இதன் காரணமாக தான் இப்பெயர் வந்தது என கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா!
லத்தீன் மொழியில் ஆஸ்திரேலிஸ் என்றால் தெற்கில் உள்ள தெரியாத பகுதி என்று பொருள். பண்டைய ரோமானியர்கள் வாழ்ந்த காலத்தில் ஆஸ்திரேலியா சென்றடைய வழி கண்டறியப்படாத காரணத்தாலும், கடல் வழி தெரியாததாலும் இப்பெயர் வைத்தனர். ஆஸ்திரேலிஸ் என்பது காலப்போக்கில் ஆஸ்திரேலியா என்றானது என கூறப்படுகிறது.

ஆசியா!
மற்றுமொரு கிரேக்க சொல்லை பெயராக பெற்ற கண்டம் ஆசியா. ஏஜியா என்ற சொல் தான் அது. ஆசியா எனும் பெயரை இக்கண்டம் கி.மு 400-களில் இருந்தே பெற்றிருக்கிறது. ஏஜியன் கடலின் கிழக்கு பகுதியில் இருந்த இடங்களை அப்போது ஆசியா என கூறி வந்துள்ளனர். காலப்போக்கில் மொத்த கண்டமும் ஆசியா எனும் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

ஐரோப்பியா!
யூரோப் என்ற சொல் யூரோப்பா என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது. கிரேக்க புராணங்களில் ஜீயுஸ் என்பவர் கதவுகளுக்கும், மனிதர்களுக்கும் தந்தையாக கருதப்படுவதாக அறியப்படுகிறது. கிரீஸில் இருக்கும் மவுன்ட் ஒலிம்பஸ் என்ற மலையில் இருந்து இவர் ஆட்சி செய்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.
இவரது காதலிகளில் ஒருவராக யூரோப்பா என்பவர் அறியப்படுகிறார். ஜீயஸ் யூரோப்பாவை ஒரு வெள்ளை எருதின் இருந்து வந்து ஈர்த்து சென்றார் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. இவரது பெயர் தான் ஐரோப்பா என பெயர் பெற்றது.

அமெரிக்கா!
அமெரிக்கோ வெஸ்புகி என்ற நபரின் பெயர் தான் அமெரிக்கா ஆனது. ஆம், இதை நாம் பாடங்களில் கூட படித்திருப்போம். 1499-ல் இப்பகுதியை அடைந்தவர் வெஸ்புகி.
அமெரிக்கா ஆசியாவை சேர்ந்த பகுதி அல்ல, அது ஒரு தனி கண்டம் என்பதையும் வெஸ்புகி கண்டறிந்தார். 1507-ல் ஜெர்மனியை சேர்ந்த மார்டின் வல்ட்லீமுல்வர் அன்பவர் உலக வரைப்படத்தில் அமெரிக்காவை சேர்த்த போது வெஸ்புகியின் முன் பெயரான அமெரிக்கோ என்பதையே அமெரிக்கா என பெயர் வைத்தார்.