Wednesday, February 8, 2017

நோய் தீர்க்கும் மூலிகைகள் உங்கள் சமையலறையில்


நோய் தீர்க்கும் மூலிகைகள் உங்கள் சமையலறையில்

நோய் தீர்க்கும் மூலிகைகள் உங்கள் சமையலறையில் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கின்றன. பல அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ள மஞ்சள், கடுகு, இஞ்சி பூண்டு என பலவற்றையும் அவை நோய் தீர்க்கும் குணத்தையும் பற்றியும் பார்த்திருப்பீர்கள். இன்னும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கணக்கிலடங்காதது. அவ்ற்றில் சிலவகைகளாவது நாம் தெரிந்து வைத்தால் நமக்குதானே நல்லது. அவ்வகையில் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மூலிகைகளும், அவை எந்த நோய்க்கு மருந்தாகிறது என்பதையும்தான். தொடர்ந்து பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் இருமல் : ரோஸ்மெரி மார்புச்சளியை கரைக்கும். தொண்டையில் உண்டாகும் கரகரப்பு மற்றும் நமைச்சலை கட்டுப்படுத்தும். அதிலுள்ள ஆற்றல் கிருமித் தொற்றை அழிக்கும். அதனை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவது மிக நல்லது. ரோஸ்மெரி எண்ணெயையும் நுகர்வதால் பலன் தரும். குடல் தொற்று : குடலில் குறிப்பாக குழந்தைகள் கண்டதையும் வாயில் வைப்பதால் எளிதாக குடலில் பேக்டீரியாக்கள் தொற்றிக் கொள்ளும். இதனை தவிர்க்க சபக்கி கீரையை வாங்கி உணவில் சமைக்கலாம். இதில் லைமோனைன் என்ற பொருள் உள்ளது. இது கிருமிகளை அழிக்கும் பண்பை பெற்றுள்ளது. மாதவிடாய் வலி: மாதவிடாயின்போது உண்டாகும் உடல் வலி, இடுப்பு வலி, சதைப்பிடிப்பிற்கு ஓமம் அருமருந்தாகும். ஓமத்தை 1 ஸ்பூன் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வலி குணமாகும். புத்துணர்வையும் தரும். கடின தாதுக்கள் : நமது உடலிலிருந்து வெளியேறாத தாதுக்கள் சேர்த்து கல் போன்று சிறு நீரகத்தில் உண்டாகிவிடும். அதோடு அவை மன அழுத்ததையும் தரும். இதனை தவிர்க்க, கொத்துமல்லியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதிலுள்ள கார்பாக்ஸிலிக் அமிலம் கடின தாத்துக்களையும் நச்சுக்களையும் வெளியேற்றி தூய்மைப்படுத்துகிறது. சிவப்பு மிளகாய் : சைனஸ் பிரச்சனை நிறைய பேருக்கு பாதிப்பை தரும். காயாத சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வதால் சைனஸ் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். வயிற்று வலி : வயிற்று வலி உப்புசம், அஜீரணம் போன்ற வயிறு சம்பந்த பிரச்சனைகள் இருந்தால் அவற்றை குணப்படுத்த புதினாவை சேர்த்துக் கொள்ளுங்கள். புதினா சாறு அல்லதுதுவையல் என எடுத்துக் கொண்டால் வயிற்றுவலி குணமாகும்.

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது?


தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது? 
இங்கு தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையைக் கொண்டு எப்படி எண்ணெய் தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். அதுவும் அந்த பொருட்களைக் கொண்டு எண்ணெய் தயாரித்து தினமும் பயன்படுத்தினால் மிகவும் நல்லது. இங்கு தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையைக் கொண்டு எப்படி எண்ணெய் தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. கறிவேப்பிலை நன்மைகள்: * கறிவேப்பிலையில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் புரோட்டீன்கள், தலைமுடி உதிர்ந்து மெலிவதைத் தடுக்கும். * கறிவேப்பிலையில் உள்ள அமினோ அமிலங்கள், மயிர்கால்களை வலிமைப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். *, கறிவேப்பிலையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்ட் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுவித்து, முடியின் வளர்ச்சியையும் தூண்டும்.   வெந்தயத்தின் நன்மைகள்: * வெந்தயத்தில் உள்ள வைட்டமின் பி, நரைமுடியைத் தடுக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்யும். * வெந்தயம் தலைமுடி உதிர்வதைத் தடுக்க உதவும் மற்றும் வெந்தயத்தில் உள்ள லிசித்தின், தலைமுடிக்கு பொலிவைத் தரும்.  

தேவையான பொருட்கள்: வெந்தயம் - 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 1/2 கப் ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன் கறிவேப்பிலை - 10-20 தயாரிக்கும் முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றி, அத்துடன் வெந்தயத்தை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் கருப்பாக மாறியதும், அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, கறிவேப்பிலையையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்து பயன்படுத்த வேண்டும். எண்ணெயின் நன்மைகள்: * இந்த எண்ணெய் பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்ய உதவும். * ஸ்கால்ப்பை வறட்சியின்றி பார்த்துக் கொள்ளும். * தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும். * தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். * முடி வெடிப்பைத் தடுக்கும் * நரைமுடியைத் தடுக்கும். * பொடுகைப் போக்கும். * ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்களை சரிசெய்யும்.


Tuesday, January 10, 2017