Tuesday, February 14, 2017

உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்க


உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்க, இந்த 6 விஷயங்கள் தான் காரணம் என்று தெரியுமா? வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் உள்ளது என்று அர்த்தம்.
சமீப காலமாக உங்கள் வீட்டில் செலவு அதிகமாக உள்ளதா? எவ்வளவு சம்பாதித்தாலும், வீட்டில் பணம் நிலைப்பதே இல்லையா? அப்படியெனில், உங்கள் வீட்டில் பணத்தை தங்கவிடாமல் செய்யும் சில விஷயங்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் உள்ளது என்று அர்த்தம். சரி, இப்போது வீட்டில் செலவை அதிகரிக்கும் அந்த விஷயங்கள் எவையென்று பார்ப்போம்.
விஷயம் #1 வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக்கூடாது. இதனால் வீட்டில் செலவு அதிகரிப்பதோடு, வருமானமும் குறைவாகவே இருக்கும்.
விஷயம் #2 வீட்டில் உடைந்த கண்ணாடி அல்லது கண்ணாடி பொருட்களை வைத்திருக்கக் கூடாது. ஒருவேளை வீட்டு ஜன்னல் கண்ணாடியில் ஏதேனும் விரிசல் விட்டிருந்தால், அதை உடனடியாக மாற்றுங்கள். ஏனெனில் இவைகள் வீட்டில் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும்.
விஷயம் #3 பாதிக்கப்பட்ட அல்லது உடைந்த சிலைகளை வீட்டினுள் வைத்திருந்தால், அதுவும் பொருளாதார பிரச்சனைகளை உண்டாக்கும். ஒருவேளை வீட்டில் தொங்கவிடப்பட்டுள்ள தெய்வங்களின் போட்டோக்கள் கிழிந்திருந்தால், அதையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
விஷயம் #4 முட் செடிகளை வீட்டினுள் வைத்து வளர்க்கக்கூடாது. இது பணப் பிரச்சனையை வீட்டில் உண்டாக்கும். ஆகவே இந்த மாதிரியான செடிகளை வீட்டின் வெளியே வைத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
விஷயம் #5 உங்கள் வீட்டில் ஏதேனும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்த நிலையில் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால், அவை வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை நுழையச் செய்து, பணப் பிரச்சனைகளை உண்டாக்கும்.

விஷயம் #6 வீட்டில் செயல்படாத கடிகாரத்தை சுவற்றில் தொங்க விட்டிருந்தல், அதை உடனடியாக சரிசெய்யுங்கள் அல்லது வெளியேற்றுங்கள். இல்லாவிட்டால், செயல்படாத கடிகாரமானது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, செல்வ வளத்தைப் பாதிக்கும்.


Sunday, February 12, 2017

தலை முழுவதும் பொடுகா?


தலை முழுவதும் பொடுகா?
வேப்பம் பூ : நாட்டு மருந்து கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். அதனை 50 கிராம் வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளஞ்சூடாக இருக்கும் போது வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.  
கற்பூரம் : கற்பூரத்தை பொடி செய்து அதனை சூடான தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு தலைகாட்டாது
உப்பு : உப்பு சிறந்த கிருமி நாசினி. பூஞ்சை மற்றும் பேக்டீரியாவை அழிக்கும். உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து அதனை கூந்தலின் வேர்க்கால்களில் த்டவி 5 நிமிடம் கழித்து குளியுங்கள். வாரம் 3 நாட்கள் செய்தால் பொடுகு மறைந்துவிடும். ஆப்பிள் சைடர் வினிகர் : ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் நீர் சம அளவு கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு மறைந்துவிடும். வெள்ளையாக தென்படுவதும் நின்றுவிடும்.

எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறிலும் பொடுகை விரட்டும் சக்தி உள்ளது. எலுமிச்சை சாறை தலையில் தடவி 15 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். அதன் தோலைக் கொண்டும் ஸ்கால்ப்பில் அழுந்த தேய்த்தால் பொடுகு வருவதும் கட்டுப்படும்.


பாதங்களை மிருதுவாக்கனுமா?


பாதங்களை மிருதுவாக்கனுமா?
கருமையான வெடிப்புள்ள பாதங்களை காக்க இதோ டிப்ஸ் : பீர்க்கங்காய் நார் : பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.
 பாத நகங்களின் அழுக்கை அகற்ற : பாத நகங்களின் இடுக்குகளில் அழுக்குகள் எளிதில் போகாது. அவ்ரை பின் வைத்து எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக தீக்குச்சியின் கைப்பிடிக்கும் பகுதியில் நல்லெண்ணெயால் நனைத்து தீபத்தில் சூடு செய்து நக இடுக்கில் உள்ள அழுக்களை எடுத்தால் எளிதில் வெளிவந்துவிடும். நகங்களும் பளபளக்கும்.
 காபிப் பொடி : காபிப் பொடி சிறந்த கிளென்ஸர் ஆகும். அதனை கொண்டு வாரம் ஒருமுறை பாதங்களில் தேய்த்து கழுவினால் பாதம் சுருக்கமின்றி மிருதுவாகும்.
வெடிப்பு மறைய : விளக்கெண்ணெய் சிறந்த முறையில் பாதங்களில் உள்ள வறட்சியை போக்கும். விளக்கெண்ணெயை நன்றாக சூடு செய்து உடனே அதில் வெள்ளை மெழுகு வர்த்தியை உதிர்த்து, பொடி செய்து போட்டால் கரைந்து விடும். இந்த கலவையை வெதுவெதுப்பான பிறகு பாதத்தில் போட்டால் பாதம் மிருதுவாகும். வெடிப்பு காணாம் போய்விடும்.

கல் உப்பு : கல் உப்பை நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து கால்களில் குறிப்பாக குதிகால்களில் தேய்த்து கழுவுங்கள். இதனால் குதிகால் வெடிப்பு மறைந்து இறந்த செல்கள் அகன்று மென்மையாகும்.


Wednesday, February 8, 2017

நோய் தீர்க்கும் மூலிகைகள் உங்கள் சமையலறையில்


நோய் தீர்க்கும் மூலிகைகள் உங்கள் சமையலறையில்

நோய் தீர்க்கும் மூலிகைகள் உங்கள் சமையலறையில் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கின்றன. பல அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ள மஞ்சள், கடுகு, இஞ்சி பூண்டு என பலவற்றையும் அவை நோய் தீர்க்கும் குணத்தையும் பற்றியும் பார்த்திருப்பீர்கள். இன்னும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கணக்கிலடங்காதது. அவ்ற்றில் சிலவகைகளாவது நாம் தெரிந்து வைத்தால் நமக்குதானே நல்லது. அவ்வகையில் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மூலிகைகளும், அவை எந்த நோய்க்கு மருந்தாகிறது என்பதையும்தான். தொடர்ந்து பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் இருமல் : ரோஸ்மெரி மார்புச்சளியை கரைக்கும். தொண்டையில் உண்டாகும் கரகரப்பு மற்றும் நமைச்சலை கட்டுப்படுத்தும். அதிலுள்ள ஆற்றல் கிருமித் தொற்றை அழிக்கும். அதனை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவது மிக நல்லது. ரோஸ்மெரி எண்ணெயையும் நுகர்வதால் பலன் தரும். குடல் தொற்று : குடலில் குறிப்பாக குழந்தைகள் கண்டதையும் வாயில் வைப்பதால் எளிதாக குடலில் பேக்டீரியாக்கள் தொற்றிக் கொள்ளும். இதனை தவிர்க்க சபக்கி கீரையை வாங்கி உணவில் சமைக்கலாம். இதில் லைமோனைன் என்ற பொருள் உள்ளது. இது கிருமிகளை அழிக்கும் பண்பை பெற்றுள்ளது. மாதவிடாய் வலி: மாதவிடாயின்போது உண்டாகும் உடல் வலி, இடுப்பு வலி, சதைப்பிடிப்பிற்கு ஓமம் அருமருந்தாகும். ஓமத்தை 1 ஸ்பூன் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வலி குணமாகும். புத்துணர்வையும் தரும். கடின தாதுக்கள் : நமது உடலிலிருந்து வெளியேறாத தாதுக்கள் சேர்த்து கல் போன்று சிறு நீரகத்தில் உண்டாகிவிடும். அதோடு அவை மன அழுத்ததையும் தரும். இதனை தவிர்க்க, கொத்துமல்லியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதிலுள்ள கார்பாக்ஸிலிக் அமிலம் கடின தாத்துக்களையும் நச்சுக்களையும் வெளியேற்றி தூய்மைப்படுத்துகிறது. சிவப்பு மிளகாய் : சைனஸ் பிரச்சனை நிறைய பேருக்கு பாதிப்பை தரும். காயாத சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வதால் சைனஸ் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். வயிற்று வலி : வயிற்று வலி உப்புசம், அஜீரணம் போன்ற வயிறு சம்பந்த பிரச்சனைகள் இருந்தால் அவற்றை குணப்படுத்த புதினாவை சேர்த்துக் கொள்ளுங்கள். புதினா சாறு அல்லதுதுவையல் என எடுத்துக் கொண்டால் வயிற்றுவலி குணமாகும்.

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது?


தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது? 
இங்கு தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையைக் கொண்டு எப்படி எண்ணெய் தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். அதுவும் அந்த பொருட்களைக் கொண்டு எண்ணெய் தயாரித்து தினமும் பயன்படுத்தினால் மிகவும் நல்லது. இங்கு தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையைக் கொண்டு எப்படி எண்ணெய் தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. கறிவேப்பிலை நன்மைகள்: * கறிவேப்பிலையில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் புரோட்டீன்கள், தலைமுடி உதிர்ந்து மெலிவதைத் தடுக்கும். * கறிவேப்பிலையில் உள்ள அமினோ அமிலங்கள், மயிர்கால்களை வலிமைப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். *, கறிவேப்பிலையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்ட் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுவித்து, முடியின் வளர்ச்சியையும் தூண்டும்.   வெந்தயத்தின் நன்மைகள்: * வெந்தயத்தில் உள்ள வைட்டமின் பி, நரைமுடியைத் தடுக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்யும். * வெந்தயம் தலைமுடி உதிர்வதைத் தடுக்க உதவும் மற்றும் வெந்தயத்தில் உள்ள லிசித்தின், தலைமுடிக்கு பொலிவைத் தரும்.  

தேவையான பொருட்கள்: வெந்தயம் - 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 1/2 கப் ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன் கறிவேப்பிலை - 10-20 தயாரிக்கும் முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றி, அத்துடன் வெந்தயத்தை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் கருப்பாக மாறியதும், அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, கறிவேப்பிலையையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்து பயன்படுத்த வேண்டும். எண்ணெயின் நன்மைகள்: * இந்த எண்ணெய் பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்ய உதவும். * ஸ்கால்ப்பை வறட்சியின்றி பார்த்துக் கொள்ளும். * தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும். * தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். * முடி வெடிப்பைத் தடுக்கும் * நரைமுடியைத் தடுக்கும். * பொடுகைப் போக்கும். * ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்களை சரிசெய்யும்.


Tuesday, January 10, 2017