Sunday, January 3, 2016

சில குழம்பு தயாரிப்புகள்

பூண்டுக் காரக் குழம்பு
தேவையானவை:
பூண்டு – 20 பல்
சின்னவெங்காயம் – 10
தக்காளி – 3 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
புளி – பெரிய எலுமிச்சை அளவு (தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டிக்கொள்ளவும்).
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 25 மில்லி
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
மல்லி (தனியா) – ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை சிறிதளவு, 4 காய்ந்த மிளகாய், 4 பூண்டு, 5 சின்னவெங்காயம், ஒரு தக்காளி, மல்லி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கி அரைத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்துத் தாளித்து, மீதம் இருக்கும் காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் புளிக்கரைசலைச் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
பொரித்த குழம்பு
தேவையானவை:
முருங்கைக்காய் – 2 (சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)
செளசெள – 1 (மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)
அவரைக்காய் – 10 (மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)
உருளைக்கிழங்கு – 2 (மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
காய்ந்த மிளகாய் – 4
மிளகு – ஒரு டீஸ்பூன்
சின்னவெங்காயம் – 10
சோம்பு – ஒரு டீஸ்பூன்
கசகசா – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் – அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் – சிறிதளவு
செய்முறை:
மிக்ஸியில் தேங்காய்த்துருவல், அரை டீஸ்பூன் சோம்பு, சின்னவெங்காயம், காய்ந்த மிளகாய், மிளகு, கசகசா, கால் டீஸ்பூன் சீரகம் எடுத்து சிறிது தயிர் விட்டு பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, மீதம் இருக்கும் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை இட்டு தாளித்து, நறுக்கிய முருங்கைக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு , அவரைக்காய், செளசெள சேர்த்து மஞ்சள்தூள் போட்டுக் கிளறி அரைத்து வைத்திருப்பதையும் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு உப்பு சேர்த்து இறக்கவும்.
கத்திரிக்காய் மொச்சைக் குழம்பு
தேவையானவை:
கத்திரிக்காய் – 5 (நீளமாக நறுக்கவும்)
ஃபிரெஷ்ஷான மொச்சை – 100 கிராம்
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
உளுந்து – ஒரு டீஸ்பூன்
மல்லி (தனியா) – 2 டீஸ்பூன்
சின்னவெங்காயம் – 20
தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
தேங்காய் – அரை மூடி (துருவிக்கொள்ளவும்)
புளி – பெரிய எலுமிச்சைப்பழம் அளவு (புளிக்கரைசல் தயாரிக்கவும்)
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பூண்டு – 10
காய்ந்த மிளகாய் – 2
கடுகு – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய், மல்லி (தனியா), பூண்டு, 10 சின்னவெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், துருவிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெயைச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, பத்து சின்னவெங்காயம், கத்திரிக்காய், மொச்சை போட்டு வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, மொச்சையும், கத்திரிக்காயும் வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்துக் கொதிக்க விடவும், பின்பு புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். இதில் உப்பு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
சுண்டைக்காய் வத்தல் குழம்பு
தேவையானவை:
புளி – பெரிய எலுமிச்சை அளவு (புளிக்கரைசல் தயாரித்துக்கொள்ளவும்)
மிளகாய்த்தூள்- ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
சுண்டைக்காய் வத்தல் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நறுக்கிய சின்னவெங்காயம் – 15
பொடியாக நறுக்கிய தக்காளி – 2
நல்லெண்ணெய் – 25 மில்லி
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, சுண்டைக்காய் வத்தல் சேர்த்து நன்றாக வறுத்து அடுப்பை அணைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சின்னவெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடம் கொதிக்க விடவும். பச்சைவாசனை போனதும் இதில் வறுத்து வைத்திருப்பதைச் சேர்த்து உப்பு, பெருங்காயம், சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
மிளகுக் குழம்பு
தேவையானவை:
புளி – எலுமிச்சை அளவு புளிக்கரைசல் தயாரிக்கவும்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு – அரை டேபிள்ஸ்பூன்
உளுந்து -அரை டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்- சிறிதளவு
எண்ணெய்- தேவையான அளவு
வறுத்து அரைக்க:
மிளகு – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
உளுந்து – அரை டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் – 3 (காரத்துக்கேற்ப )
கறிவேப்பிலை – சிறிதளவு
சீரகம் – அரை டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, வறுக்க தேவையான பொருட்களை வறுத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து போட்டு, பொரிந்ததும், புளிக்கரைசல், மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வானை போனதும் தீயை மிதமாக்கி, அரைத்து வைத்திருப்பதைச் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, உப்பு சேர்த்து இறக்கவும்.
உப்புக் கண்டம் குழம்பு
தேவையானவை:
உப்புக் கண்டம் – 200 கிராம்
சின்னவெங்காயம் – 15 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – 3 (பொடியாக நறுக்கவும்)
முருங்கைக்காய் – 1 (சிறிது நீளமாக நறுக்கவும்
கத்தரிக்காய் – 2 (நீளமாக நறுக்கவும்)
தேங்காய் – அரை மூடி (துருவி அரைத்துக் கொள்ளவும்)
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
புளிக்கரைசல் – 50 மில்லி
வெந்தயம் – அரை டீஸ்பூன்
உளுந்து – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணெய் – 25 மில்லி
செய்முறை:
உப்புக் கண்டத்தை சூடான நீரில் சுத்தம் செய்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் 5 வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். இதில் புளிக்கரைசலைச் சேர்த்து பச்சை வாசனை போனதும் உப்புக் கண்டத்தையும் சேர்த்து வேக விடவும். அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி வெந்தயம், உளுந்து, கறிவேப்பிலை மீதம் உள்ள வெங்காயம், முருங்கைக்காய், கத்திரிக்காய் போட்டு வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்கவும். இதில் வெந்த உப்புக் கண்ட கலவையைச் சேர்த்து அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்துக் கலந்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கவும்.
நாட்டுக்கோழிக் குழம்பு
தேவையானவை:
நாட்டுக்கோழி – அரை கிலோ
சின்னவெங்காயம் – 15 (இரண்டாக நறுக்கவும்)
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 25 மில்லி
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
வறுத்து அரைக்க:
மல்லி (தனியா) – ஒன்றரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
கசகசா – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
பச்சரிசி – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
வறுக்க தேவையானவற்றை வெறும் வாணலியில வறுத்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும். கோழியைக் கழுவி சுத்தம் செய்து மஞ்சள்தூள் தடவி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுதுடன், கோழி, உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். கோழிக்கறி முக்கால் பதம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
முட்டைக் குழம்பு
தேவையானவை:
முட்டை – 4 (வேக வைத்து முட்டை ஓட்டினை நீக்கி விடவும்)
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
அரைக்க :
தேங்காய் – அரை மூடி (துருவியது)
சோம்பு – அரை டீஸ்பூன்
பட்டை – 2
பொட்டுக்கடலை – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – சிறிதளவு
சின்னவெங்காயம் – 10
செய்முறை:
அரைக்கத் தேவையானவற்றை சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி மஞ்சள்தூள், தக்காளி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, முட்டையை லேசாக வதக்கி, கொதிக்கும் குழம்பில் சேர்த்து இறக்கவும்.
மட்டன் எலும்புக் குழம்பு
தேவையானவை:
மட்டன் எலும்பு – அரை கிலோ
தேங்காய் – அரை மூடி (துருவி அரைத்துக்கொள்ளவும்)
உருளைக்கிழங்கு – 1
சின்னவெங்காயம் – 10
தக்காளி – 2
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – முக்கால் டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பட்டை – சிறுதுண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய்- 50 மில்லி
செய்முறை:
எலும்பை நன்றாக சுத்தம் செய்து, இஞ்சி – பூண்டு விழுது, மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்துக் கலந்து குக்கரில் 7 முதல் 8 வரை விசில் வைத்து வேகவைக்கவும். பிறகு இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து மிதமான சூட்டில் வைத்துக் கொதிக்க வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, கொதிக்க வைத்த எலும்பை இத்துடன் சேர்த்துக் கலந்து 15 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு உப்பு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

கருவாட்டுக் குழம்பு
தேவையானவை:
கருவாடு – 200 கிராம்
புளிக் கரைசல் – 200 மில்லி
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 50 மில்லி
கடுகு – கால் டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
சின்னவெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
பூண்டு – 10 (முழுதாக போடவும்)
தேங்காய் – அரை மூடி (துருவி முதல் பால் எடுத்து கொள்ளவும்)
உப்பு – தேவையான அளவு
வெந்தயம் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
செய்முறை:
சுடுதண்ணீரில் கருவாடை சுத்தம் செய்து சிறிதளவு எண்ணெயில் லேசாக வதக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு, 300 மில்லி தண்ணீர் (புளிக்கரைசல் அளவில் இருந்து இரண்டு மடங்கு) சேர்த்துக் கலக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து விட்டு, இதில் வெங்காயம், பூண்டு, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் புளிக்கரைசல் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கருவாட்டை சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடம் வேகவிடவும். இறுதியாக முதல் தேங்காய்ப்பால் கலந்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

No comments:

Post a Comment