குங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்
காஷ்மீரின் குங்குமப் பூ, நம் கன்னியாகுமரி வரை பிரசித்து பெற்றதுதான். குங்குமப் பூ என்றாலே அழகு பற்றிதான் நமக்கு ஞாபகம் வரும். குங்குமப் பூவில் இரும்பு சத்து உள்ளது. அதனை பாலில் கலந்து குடித்தால், ரத்த சோகை வராது.
அதுபோல் அழகிலும் அற்புதத்தை செய்யும் இந்த பூ. குங்குமப் பூவினை பெயர் உபயோகித்து எத்தனையோ க்ரீம்கள் வந்தாலும், அவை யாவும் உண்மையான குங்குமப் பூவினை உபயோக்படுத்துவதில்லை. மாறாக அதன் நிறமியையே உபயோகிக்கிறார்கள். எதற்காக காசு கொடுத்து வாங்கி ஏமாறுகிறீர்கள். நீங்களே குங்கமப் பூ வாங்கி, உங்கள் அழகினை மேலும் மெருகூட்டி பலன்களைப் பெறலாமே.

செக்க சிவப்பான உதடுகளுக்கு : குங்குமப்பூவினை நன்றாக பொடித்து, 1 டேபிள் ஸ்பூன் நீரில் ஊற விடுங்கள். நன்றாக
குங்குமப் பூவின் நிறம் நீரில் கலந்ததும், அந்த நீரில்
சிறிது வெண்ணெயை குழைத்து, தினமும் உதட்டில் பூசி
வாருங்கள். உங்கள் உதட்டின் கருமை நிறம் மாறி, இளஞ்சிவப்பான
உதட்டினை பெறுவது உறுதி. உதட்டில் வறட்சி இல்லாமல், மின்னும்.
அழகான உதடு கிடைக்கும்.
சுருக்கம் இல்லாத சரும பளபளப்பிற்கு : தேவையானவை : பாதாம் - 25 கிராம் ரவை - 30 கிராம்
குங்குமப் பூ- 10 கிராம் மேலே சொன்னவற்றை நன்றாக பொடி
செய்து கொள்ளுங்கள். இவற்றுடன் சிறிது பசும் பால் கலந்து கெட்டியாக வடை போல்
தட்டிக் கொள்ளுங்கள். இதனை உலர்த்தி, தினமும் ஒன்றை
எடுத்து, சிறிது பாலாடை கலந்து முகத்தில் தேயுங்கள். 10
நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதனால் சருமத்தில் உள்ள
சுருக்கங்கள் மறைந்து மின்னும் மேனி கிடைக்கும்.
நகங்கள் மிளிர : நகச் சுத்தி வந்து உங்கள் நகங்கள் அழுகிவிட்டதா? அப்படியெனில் இந்த குங்குமப் பூ, வெண்ணெய் கலவையை உபயோகப்படுத்துங்கள். தினமும் நகங்கள் மீது பூசி
வந்தால், சொத்தையான நகங்கள் உதிர்ந்து, புதிய நகங்கள் ஆரோக்கியமாக வளரும். குங்குமப் பூவில் உள்ள
பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள், அவைகளை எதிர்த்து,
நல்ல நகங்கள் வளர வழி செய்கின்றன.
அடர்த்தியான இமைகள் கிடைக்க : நம் முகத்தில் முதலில் வசீகரிப்பது
கண்கள்தான். கண்களுக்கு இமைகள் பெரியதாக இருந்தால், இன்னும் கவர்ச்சியே தரும். இதற்கு குங்குமப் பூ, வெண்ணெய் கலவையை உபயோகிங்கள். அது, இமைகளில்
முடியினை வேகமாக வளரச் செய்யும். தினமும் இரவு தூங்கும் முன், இந்த கலவையை இமைகளில் பூசினால், அழகான இமைகள்
கிடைக்கும்.
மேனி அழகினை சிவப்பாக்க : குங்குமப் பூவினை நன்றாக பொடி செய்து
கொள்ளுங்கள். அதனை சிறிது பாலில் குழைத்து, தினமும் முகம், கழுத்து ஆகிய இடங்களில்
பூசுங்கள். நாளடைவில் கருமை நிறம் மறைந்து, சிவப்பாவதை
கண்கூடாக காண்பீர்கள்.
குங்குமப்பூ ஸ்க்ரப் : சர்க்கரையை பொடி செய்துகொள்ளுங்கள். அதனை ஒரு
டீஸ்பூன் எடுத்து, அது கலக்கும்
அளவுக்கு வெண்ணெய் மற்றும் குங்குமப்பூ சம அளவு சேர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு
கைகளால் நுரை வரும் வரை நன்றாக மசியுங்கள். க்ரீமாக வந்ததும், முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி பூசுங்கள். 5 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். தினமும் இவ்வாறு செய்து வந்தால்,
தொய்வடைந்த சருமம், இறுக்கம் பெற்று
பொலிவுடன் இருக்கும்.
No comments:
Post a Comment