ஆரோக்கியமான இதயத்திற்கு இந்த 5 யோகா முத்திரை ஆசனங்களை தினமும் செய்யுங்க
நீண்ட ஆரோக்கியமான வாழ்வை பெறுவதற்கு ஒருவரது இதயம்
என்பது நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஒன்று. அத்தகைய ஆரோக்கியமான
இதயத்தை பெறுவதற்கு நல்ல உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் தேவை. அந்த வகையில், உடலை
ஆரோக்கியமாக வைப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்று தான் யோகா. இது உடலுக்கு, மனதிற்கு சம
அளவில் ஊட்டத்தை வழங்குகிறது.
ஆசனத்தோடு சேர்த்து, சில முத்திரைகளும்
உள்ளன. அவை பழகுவதற்கு சுலபமானவை தான். தொடர்ந்து இந்த முத்திரைகளை செய்து வரும் போது,
உடல்நிலையில் பல்வேறு நல்ல மாற்றங்களை காண்பதோடு, இதயத்தையும் ஆரோக்கியப்படுத்திட முடியும்.
இதயத்தை பலப்படுத்த இதய ஆரோக்கியத்திற்கான
உடற்பயிற்சிகளோடு சேர்த்து, இந்த முத்திரைகளையும் தொடர்ந்து செய்வதன் மூலம், நல்ல முன்னேற்றத்தை
நீங்களே உணரலாம்...
அபனா வாயு முத்திரை – இதயத்திற்கான
முத்திரை : இதயத்தை ஆரோக்கியப்படுத்துவதோடு, இதயத் துடிப்பை சீராக்குகிறது. மேலும்,
வாயுத் தொல்லையில் இருந்தும் விடுவிக்க உதவுகிறது. மித்ரா சஞ்சீவனி முத்திரை என்றழைக்கப்படும்
இந்த முத்திரையை செய்வதன் மூலம் மாரடைப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கிறது. வலியை
குறைப்பதோடு, இரத்த ஓட்டத்தையும் சீராக்கி கடும் நெஞ்சுவலியை போக்கிவிடும். செய்முறை
: * முதலில், பத்மாசனத்தில் உட்கார்ந்து கொள்ளவும். * பின்பு, கைகளை தொடைகளின் மீது
மேல்நோக்கிய படி வைக்கவும். * இப்போது, நடு மற்றும் மோதிர விரல்களை உள்ளங்கை பார்த்தபடி
மடக்கி, பெருவிரல் நுனியை தொடும்படி வைக்கவும். * அடுத்ததாக, ஆள்காட்டி விரலை மடக்கி,
பெருவிரலின் அடிப்புறம் தொட வைக்கவும். * சுண்டுவிரல் வெளியே பார்த்தபடி அப்படியே இருக்கவும்.
* இப்போது, கண்களை மூடிக் கொண்டு அந்த முத்திரையை உங்களுக்கு தேவையான அளவு அப்படி வைத்தபடி
உட்காரவும். காலஅளவு : இதற்கென எந்தவொரு கால அவகாசமும் இல்லை. இருப்பினும், இதய கோளாறு
உள்ளவர்கள் அல்லது இதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முத்திரையை குறைந்தது 30 நிமிடங்களாவது
செய்யவும். தினமும் இரு முறை 15 நிமிடங்கள் என்ற வீதம் செய்யலாம்.
பிராண முத்திரை – வாழ்க்கையின்
முத்திரை : பெயர் குறிப்பிடுவது போல, இந்த யோகா முத்திரை உயிர் சக்தியை மேம்படுத்துகிறது.
உண்மையில் இது அடைபுள்ள இரத்த தமனிகளை அழிக்க உதவுவதோடு, இதய நிலைமைகளுடன் தொடர்புடைய
ஆபத்தை குறைக்கிறது. இந்த முத்திரையை தினமும் பயிற்சி செய்வது உடல் வலிமை மற்றும் நோய்
எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. செய்முறை: * முதலில் பத்மாசனத்தில் உர்கார்ந்து
கொள்ளவும். * பின்பு, கைகளை தொடைகளின் மீது மேல்நோக்கிய படி வைக்கவும். * இப்போது,
சுண்டு விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி, பெருவிரலை தொடும்படி வைக்கவும். * அடுத்ததாக,
நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை வெளிபுறம் பார்த்தபடி அப்படியே நீட்டி வைக்கவும்.
* இப்போது, கண்களை மூடிக்கொண்டு இந்த முத்திரையை வைத்தபடி தேவைப்படும் நேரம்வரை உட்காரவும்.
காலஅளவு: இந்த முத்திரையை செய்வதற்கும் காலஅவகாசம் எதுவும் இல்லை. இதனை, நீங்கள் எத்தனை
முறை வேண்டுமானாலும் உங்கள் விருப்பத்திற்கு செய்யலாம்.
சூரிய முத்திரை – சூரியனின்
முத்திரை: இந்த முத்திரையின் மூலம் நமது உடலில் உள்ள சோலார் பின்னலை செயல்படுத்தி,
உடலுக்கான ஆற்றலை நிரப்பிக் கொள்ள முடியும். மேலும், இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில்
சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஹைப்போ தைராய்டிசம், உடல் பருமனை அதிகப்படுத்தும்.
மேலும், இது இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கிறது. இந்த முத்திரையைப் பயிற்சி செய்வது
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், உங்கள் இதயத்தின்
ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். அதோடுமட்டும் அல்லாமல், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும்
இது உதவுகிறது. செய்முறை: * முதலில் பத்மாசனத்தில் உர்கார்ந்து கொள்ளவும். * பின்பு,
கைகளை தொடைகளின் மீது மேல்நோக்கிய படி வைக்கவும். * அடுத்ததாக, மோதிர விரலை உள்நோக்கி
மடக்கி, பெருவிரலின் கீழ்பகுதியை தொடவேண்டும். * மேலும், மோதிர விரலை பெருவிரல் கொண்டு
அழுத்தவும். * சுண்டு விரல், நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் மூன்றும் வெளியே நீட்டியபடி
அப்படியே இருக்கவும். * இப்போது, கண்களை மூடியபடி எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம்
இந்த முத்திரையை வைத்தபடி அமரவும். காலஅவகாசம்: முத்திரையை தினமும் 2 முறை 5 முதல்
15 நிமிடங்கள் வீதம் செய்யவும்.
லிங்க முத்திரை: சமஸ்கிருதத்தில்
லிங்கம் என்றால், ஃபாலஸ்-ஆண் இனப்பெருக்க உறுப்பைக் குறிக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
இந்த முத்திரை உதவியாக இருக்கும். உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஆகியவை உங்கள் இதயத்தை
பாதித்து, கடுமையான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். இதைப் பயிற்சி செய்வது
நீரிழிவு மற்றும் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்
உதவும். செய்முறை: * முதலில், பத்மாசனத்தில் அமரவும். * அடுத்ததாக, விரல்கள் நன்கு
பின்னியபடி 2 கைகளையும் நன்கு கோர்த்தபடி நெஞ்சிற்கு நேராக நீட்டவும். * இடது கையின்
பெருவிரல் மேல்நோக்கி பார்த்தபடி நீட்டவும். * வலது கையின், ஆள்காட்டி விரல் மற்றும்
பெருவிரல் நன்கு ஒட்டியபடி இடது பெருவிரலை நன்கு இறுக்கமாக பிடித்து கொள்ளவும். * இந்த
முத்திரையை வைத்தபடி, 20 நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்து, மூச்சை நன்கு இழுத்துவிடவும்.
காலஅளவு: இந்த முத்திரையை வெறும் வயிற்றில் குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு செய்யவும்.
தினமும், அரைமணி நேரம் இதனை தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும். ஒருவேளை உங்களுக்கு
அசிடிட்டி பிரச்னை இருந்தால் இந்த முத்திரை செய்வதை தவிர்த்திடவும்.
கணேஷா முத்திரை: தடைகளை நீக்கும்
கணேஷரின் பெயரைக்கொண்ட இந்த முத்திரை, அதிக அளவில் கொழுப்பை கொண்டவர்களுக்கும், இதயம்
பலவீனமானவர்களுக்கும் மிகவும் ஏற்றது. இது உங்கள் மூச்சுக்குழாய்களைத் திறந்து, சிறந்த
இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. இது இதய சக்கரத்தைத் திறந்து உங்கள் இதயத்தை பலப்படுத்துகிறது.
இதய சக்கரத்தில் நிறைந்த மன அழுத்தத்திற்கு ஒரு அற்புதமான வழி. மேலும், இது மாரடைப்பு
ஏற்படும் சூழ்நிலைகளில் ஒரு சிறந்த முதலுதவியாக செயல்படுகிறது. செய்முறை: * முதலில்,
பத்மாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். * கைகளை வெளிபுறமாக நீட்டி கொள்ளவும். * பின்பு,
2 கைகளையும் நெஞ்சு பகுதிக்கு நேராக நீட்டி அருகே வைத்துக்கொள்ளவும். * இப்போது, இடது
கையின் உள்பகுதி வெளியே பார்த்தபடியும், வலது கையின் உள்பகுதி உள்ளே பார்த்தபடியும்,
விரல் நுனிகளை கொண்டு பிடித்து கொள்ளவும். * அடுத்ததாக, கைகளை மாற்றி பிடித்து மூச்சை
இழுத்து விடவும். * மூச்சை மெதுவாக இழுத்து விடும் போது, கைகளையும் பிரித்து விடவும்.
* இதேப்போல, 6 முறை இதனை தொடர்ந்து செய்யவும். காலஅளவு: இவ்வளவு நேரம் இதை செய்ய வேண்டும்
என்ற எந்தவொரு காலஅளவும் கிடையாது. குறைந்தபட்சம் 6 முறையாவது இதனை செய்ய வேண்டுமென்பதே
அறிவுரை.
No comments:
Post a Comment