பித்த வெடிப்பு மறைய
நன்னாரி : நன்னாரிவேர் 10 கிராம் எடுத்து ஒரு டம்ளர்
நீரில் கொதிக்க வைத்து பாதியாக குறையும்போது அதனை வடிகட்டி வைக்கவும். அதனுடன்
பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் வெடிப்பு மறையும்.
கரிசலாங்கண்ணி : வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.
பப்பாளி பழம் : பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து
பாதங்களில் தேயுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். காலை மாலை தினமும் செய்துவந்தால்
பாதங்கள் மிருதுவாகும். வெடிப்பும் மறையும்.
உருளைக் கிழங்கு : உருளைக்கிழங்கை அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தால்
வெடிப்பு மறைந்து, வெடிப்பினால் ஏற்பட்ட கருமை
நீங்கி, பாதம் மிளிரும்.
வெங்காயம் : வெங்காயத்தை வதக்கி அரைத்துக் கொள்ளுங்கள். இதனை கால் பாதங்களில்
தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.
No comments:
Post a Comment